සිංහල English (United Kingdom)
சுவசரிய (Healthnet)
நீங்கள் இருப்பது இங்கே : முகப்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

#|0-9 | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. எவ்வாறு ஆஸ்த்மா நோய் கண்டு பிடிக்கப்படுகிறது?

நோய் அறிகுறிகளின் மூலம் அல்லது வேறு வகையால் வைத்தியர்கள் இதனை இலகுவில் கண்டு பிடித்துவிடுவார்கள்.

உறுதிப் படுத்தப் படுவதற்காக பீக் பளா மீட்டர், ச்பிரோமேற்றி உபயோகிக்கப்படுகிறது.

2. ஆஸ்த்மா போய்விடுமா?

இதை முற்று முழுதாக குணப்படுத்த முடியாது. ஆயினும் ஆஸ்துமா உண்டாகிய குழந்தைகளில் அரைவாசிப் பேரில் வளர்ந்தபின் ஆஸ்த்மா காணப்படுவதில்லை. ஆஸ்துமாவை முற்றாக இல்லாமல் செய்ய முடியாத போதிலும் நன்றாகக் கட்டுப் படுத்தக் கூடியது.

ஆஸ்த்மாவுடன் தொடர்பு பட்ட நிலைமைகள்

  • அல்லேர்ஜிக் ரைனைடிஸ் - தும்மல், கண் அரிப்பு, மூக்கு வடிதல் போன்றன இதற்கான அறிகுறிகள் ஆகும்.
  • எக்ஜிமா - தோலில் ஏற்படும் அரிப்பு. இது நீர் வடிதலோ இல்லாமலோ இருக்கலாம்.
3. எவ்வாறு ஆஸ்த்மா தவிர்க்கப்படலாம்?

ஆஸ்துமாவை தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆஸ்துமவைத் தவிர்த்துக் கொள்ளலாம். புகைத்தலைத் தவிர்ப்பதன் மூலம் நோயாளியினதும் அவரது குடும்பத்தினரதும் ஆஸ்துமா ஏற்படும் அளவைக் குறைக்கலாம்.

ஆயினும் ஆச்துமவைத் தூண்டும் காரணியான உடற் பயிற்ச்சியைநிறுத்தக் கூடாது. உடற்பயிற்சி சுகாதாரமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உங்களை உற்சாகமாக வைத்திருக்கக் கூடிய மருந்துகள் பற்றி உங்களுடைய வைத்தியருடன் கதையுங்கள்.

வைத்தியர் தரும் மருந்துகளை சரியான முறையில் பாவியுங்கள்.

ஆஸ்துமா பற்றியும் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.

காலத்துக்குக் காலம் ஆஸ்துமாவின் அறிகுறிகளையும் கட்டுப்பாட்டில் உள்ள அளவையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

4. எலிக் காய்ச்சல் எவ்வாறு கண்டு பிடிக்கப்படுகிறது?

நோயின் அறிகுறிகளைக் கொண்டு எலிக் காய்ச்சலைக் கண்டு பிடித்துவிடலாம். இரத்தம், முள்ளந்தண்டு நீர், சிறுநீர் போன்றவற்றின் சாம்பிள் எடுத்து அதிலுள்ள பாக்டீரியாவை வாளர்ப்பதின் ஊடாகவும் எலிக் காய்ச்சலை கண்டு பிடித்துவிடலாம்.

5. எலிக்காய்ச்சலுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

இந்நோயின் முதல் நிலையில் கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே டோக்சிசைக்கிளின் எனும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தின் மூலம் சிகிச்சை அளிப்பதே மிகச்சிறந்தது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் வேறு திரவங்களும் ஏற்ற நேரிடும். தொற்றினால் மிகக் கடுமையாக ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கவும் நேரிடலாம். நோய் மாறியவுடன் அதிகமாக ஈரலினதும் சிருநீரகத்தினதும் தொழிற்பாடு வழமைக்குத் திரும்பிவிடும்.

6. எலிக் காய்ச்சல் வாக்சின் மூலம் தடுக்கப்படக் கூடியதா?

எலிக் காய்ச்சலுக்கான வாக்சின் சில நாடுகளில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இவை குறுகிய கால வீரியம் உள்ள மருந்து என்பதால் ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்பட வேண்டும். எலிக் காய்ச்சல் பொதுவாகக் காணப்படும் பிரதேசங்களுக்கு செல்லும் பிரயாணிகள் நோய்க் கிருமிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனக் கருதும் காலத்திலும் அதற்கு முன்னதாகவும் டோக்ஸ்சிசய்க்ளின் 200 மி.கி. மருந்தை ஒரு கிழமை வீதம் வாயால் உட்கொள்ளலாம்.

இலங்கையில் எலிக் காய்ச்சல் ஒரு அறிவிக்கப்பட வேண்டிய நோயாகும்.

7. எவ்வாறு நோய் கண்டு பிடிக்கப்படுகிறது?

உங்களுடைய வைத்தியர் உங்களுடைய குடும்பத்தில் யாருக்காவது இதய இரத்தக் குழாய் நோய், அதிக கொலேஸ்ரோல் அல்லது நீரிழிவு நோய் இருந்தது பற்றி விசாரிப்பார். நீங்கள் எப்போதாவது புகைப்பிடித்தீர்களா என்பது பற்றியும் உங்களது உணவுப் பழக்கத்தைப் பற்றியும் வைத்தியர் உங்களிடம் கேட்பார். அவர் உங்களின் குருதி அமுக்கத்தை சோதிப்பார் அத்துடன் ஷன்தொமா, ஷந்தலேஸ்மா இருக்கின்றதா என்றும் பார்ப்பார். உங்களுடைய வைத்தியர் உங்களுக்கு கொலேஸ்ரோல் இருக்கிறதா இல்லையா என்பதை குருதி மாதிரியின் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவர்.

8. எவ்வாறு அதிக கொலேஸ்ரோலை குறைப்பது?

உங்களது கொலேஸ்ரோல் அதிகம் என்றால் நீங்கள் அதைக் குறைப்பதற்கு நீண்டகால முயற்சி ஒன்றை எடுக்க வேண்டும். நீங்கள் உணவுப் பழக்கத்தின் மூலம் அதிக அளவிலான கொலேஸ்ரொலைக் குறைத்துக் கொள்ள முடியும். அவ்வுணவுப் பழக்கங்களாவன; சச்சுறேடட் கொழுப்பைக் குறைத்தல், அதிகமாக பலன்களையும், மரக்கறிகளையும் உட்கொள்ளல், கூடாத கொழுப்புள்ள உணவை விட்டும் நல்ல கொழுப்புள்ள உணவை உட்கொள்ளுதல். இவ்வுனவுப் பழக்கம் தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் அமைந்தால்தான் குறைந்த கொலேஸ்ரோல் அளவை வைத்துக் கொள்ள முடியும். உடற்பயிற்சியும் ஒவ்வொரு நாளும் அவசியம். அதன் மூலம் (ஹ்ட்ல்) எனும் நல்ல கொலேஸ்ரோல் அதிகரிப்பதற்கும் ல்ட்ல் எனும் கெட்ட கொலேஸ்ரோல் அளவு குறைவதற்கும் காரணமாகும்.

9. அதிக கொலேஸ்ரோல் ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது?

நீங்கள் அதிக கொலேஸ்ரோல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியாக சுகாதாரமான உணவுப் பழக்கத்திலும் ஒவ்வொரு நாளும் உடட்பயிற்சியிலும் இருப்பது மிக உறுதுணையாக இருக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும் (முட்டை, கொழுப்புள்ள சிவப்பு மாமிசம், பாம் அல்லது தேங்காய் எண்ணெய், முழுஆடைப் பால் உணவுகள்). அதற்குப் பதிலாக புதிய பழங்களையும் மரக்கறிகளையும் உணவாகக் கொள்ளுங்கள், முழுத்தானியப் பாண், தானிய வகைகள், கொழுப்பு குறைந்த பால் உணவுகள் ஆகிய வற்றையும் உணவாகக் கொள்ளலாம்.

10. கொலேச்டேரோல் அல்லது HDL பரிசோதனைக்கு ஒரு நோயாளி நோன்பு இருத்தல் வேண்டுமா?

இல்லை. தற்கால கண்டுபிடிப்புக்களின்படி முழுக் கொலேச்டேரோல் அளவு ௩௦ மி கி/த.லி ஒவ்வோர் நாளும் கூடவும் குறையவும் முடியும். இது நோன்பு இருத்தலுடன் சம்பந்தப் படுவதில்லை. காணப்படும் நாளாந்த வித்தியாசம் அண்மைக் கால உணவுகளினால் ஏற்பட்ட மாற்றத்தின் அளவை விட அதிகமானது. இது உடம்பு கர்பநேட்டுக்கும் கர்போனிக் அமிலத்திற்கும் இடையிலான விகிதத்தை 20:1 வைத்திருக்க முயற்சிக்கிறது. உடம்பு தனது இலத்திரன் சமவளவை பேண முயற்சிக்கிறது. உடம்பில் கற்றையன்களின் செறிவு அன்னயன்களின் செறிவுக்குச் சமனாகக் காணப்படுகின்றது.